பட்டுப் பட்டாம்பூச்சி
பறந்து பறந்து போச்சி.
பூவுக்குப் பூவு தாவி
தேனை குடிக்கலாச்சி.
கண்கள் ரசிக்கலாச்சி
என் மனமும் மயங்கலாச்சி.
கால்கள் தேடித் தேடி
அதனைப் பிடிக்கப் போச்சி.
நான் ஓடி ஓடிப் போக
ஆடுது கண்ணா மூச்சி.
நானும் பின்னே போக
காட்டுது எனக்கு டோச்சி.
விரல்கள் சிறகைப் பிடிக்க
பட்டு நழுவி நழுவி போச்சி.
பொறுமை குறைந்து போச்சி
கோபம் ஏறிப் போச்சு.
பக்கத்து வீட்டு ஆச்சி
என்னைப் பார்த்துச் சிரிச்சி
எனது கவனம் போச்சி
பட்டு தூரம் போச்சி.
எடுத்தேன் நீண்ட குச்சி
அடித்தேன், இறக்கை போச்சி.
சிறகைத் துறந்த பூச்சி
வாழ்வை இழந்து போச்சி.
என்னடா! ராஜபக்சே!
என மனம் அழைக்கலாச்சி.
தவறை அறிந்த மனசாட்சி
உணர்ந்தது, கனவுக் காட்சி.
மனம் மென்மை உணரலாச்சி
எழுந்து பட்டைத் தேடப்போச்சி
கண்டேன் பட்டாம்பூச்சி.
ஆ! என்ன இனிய காட்சி!
என் மனம் அதனை ரசிக்கலாச்சி.
வாழ்வின் பொருள் புரிஞ்சிபோச்சி.
இயற்கைதான் வாழ்வின் உயிர் மூச்சி
அதனைக் காப்பது என் முடிவாச்சி.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
இரண்டு மூன்று தடவை படித்து ரசிச்சாச்சி… வாழ்த்துக்கள்…