‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. சீதக்காதி எனும் வள்ளல், தான் வாழும்போதும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாகக் கொடைகள் கொடுத்ததாகவும் தான் இறந்த பின்பும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல, செவ்வூர் சிவந்தியப்பன் என்பவன், தான் வாழ்ந்தபோதும் ஊர் மக்களை நிம்மதியாக இருக்க விடவில்லை என்றும் அவர்களுக்கு எப்போதும் குடைச்சல் கொடுப்பதும் அவர்களைப் பிரச்சினையில் மாட்டி விடுவதுமே தொழிலாகக் கொண்டிருந்தான் என்றும் தான் இறந்துவிட்டால் அந்த ஊர் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்களைத் தீராத பிரச்சனையில் மாட்டிவிட்டு இறந்துவிட்டான் என்றும் ஒரு கதை கூறுவர். எனவே, செவ்வூர் சிவந்தியப்பனை போன்று எப்போதும் அடுத்தவர்களுக்குக் கெடுதல் செய்துகொண்டே இருப்பவர்களை ‘செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்’ எனும் பழமொழியைக் கொண்டுக் குறிப்போம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
சகோதரரே வணக்கம் நான் சிற்றுளி என்ற மாத இதழை நடத்தி வருகிறேன் எனக்கு தங்களுடைய படைப்புகளை அச்சு ஊடகத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறேன் தங்கள் என்னுடைய புத்தகம் வழியாக மக்களை சந்திக்க விரும்பினாள் எனக்கு எழுதுங்கள் என்ன என்னுடைய மின்னஞ்சல் முகவரி [email protected] என்னுடைய தொலைபேசி எண் 9791225005