வட்டார வழக்குச் சொற்கள் தமிழின் தொன்மையையும் செம்மையையும் மக்களுடைய பண்பாட்டையும் காட்டுகின்றன. பெரும்பாலும் அவை தூய தமிழ்ச் சொற்களாக உள்ளன. இக்காலத்தில் வட்டார வழக்கில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது. எனவே, அவற்றைக் காப்பதும் அவைகளை இணையதளங்களில் பதிவு செய்வதும் மிகவும் அவசியமாகிறது. இவைகள் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தென்னாற்காடு மாவட்டம் பழைய விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், குமரித்தமிழ், தஞ்சை தமிழ், கொங்குத்தமிழ் என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கு இருப்பது போல், தென்னாற்காடு மாவட்டத்திற்கும் வட்டார வழக்குச் சொற்கள் இருக்கின்றன. தென்னாற்காடு மாவட்ட தமிழ் பொதுவாக நடுநாட்டுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. நடுநாட்டுத் தமிழ் சொற்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண இருக்கிறோம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த நடுநாட்டுச் சொற்களைச் சேர்க்கலாம்.
சில தென்னாற்காடு (நடுநாட்டு) வட்டார வழக்குச் சொற்களும் அதன் பொருள்களும்
There are currently 117 நடுநாட்டுச் சொற்கள் in this directory
அடப்பாசாரம்தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்து இருத்தல்
அன்னக்குத்திசோத்துக்கரண்டி
அளப்பன்அதிகமாகப் பொய் மற்றும் கற்பனைகளைப் பேசுபவன்
இசுத்துக்கிணுஇழுத்துக்கொண்டு
உறக்கம் பிடித்தல்விரக்தியுடன் கூடிய மனச்சோர்வுடன் இருத்தல்
என்னங்காட்டியும்என்னைவிடவும்
ஏக்கிளி பித்தன்சுயநினைவோடு பைத்தியக்கார செயல்களைச் செய்பவன்
ஒட்டுத் தூத்தல்மழை கிட்டத்தட்ட நின்றபிறகு கடைசியாகப் பெய்யும் பிசிறுத் தூரல்
ஒப்புக்குபெயரளவில் மட்டும் ஒரு காரியத்தைச் செய்தல்
ஒரேடியாஒரே முறையில், ஒட்டுமொத்தமாக
ஒரேமுட்டாஎல்லாம் ஒரே நேரத்தில், மொத்தமாக
ஓசரக்குஅவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையுடனும் ஒரு வேலையைச் செய்தல் (not in hurry burry), அவசர மற்றும் முக்கிய வேலைகளை முதலிலும் பிற வேலைகளை ஓசரக்காகவும் செய்தல்
ஓட்டாண்டிவாழ்வாதாரம் ஒன்றுமில்லாதவன்
கக்குள்நீர் மற்றும் எண்ணையில் அவை தெளிந்தபின் அடியில் நிற்பவை
கடிப்பான்பொரியல் அல்லது கூட்டு
கமான்ஓடை அல்லது ஆற்றுப் பாலத்தில் இருபுறமும் அமர்வதற்கு கட்டப்படும் திண்ணை போன்ற அமைப்பு
காபந்து செய்தல்(சொந்தக்காரர்களுக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு) தேவையானவைகளை பார்த்துப் பார்த்துச் செய்து அவர்களை முன்னேற்றுதல்
காமகாரம்அன்பற்ற வெறுப்புடன் வஞ்சத்தோடு இருத்தல்
குச்சத்தனம்கலகம் மூட்டி கலவரம் உண்டு பண்ணும் குணம், அடுத்தவரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சி காணுதல்
கெராளிஅரை பைத்தியம் போன்றவன்
கொஞ்சபோரம்ஒரு மிகச்சிறு பகுதி
சினப்புப்பொருள்ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருள்
சிறுப்பாணிஎப்பொழுதும் கஷ்டம், சோதனை மற்றும் வேதனைகளையே அனுபவித்தல்
சோப்ளாங்கிஎதற்கும் உதவாத சோம்பேறி
தாராத்துட்டேன்தொலைத்துவிட்டேன்
திப்பிகரைத்தும் கரையாமல் அல்லது அரைத்தும் அரையாமல் தொக்கி நிற்பவை
தெக்கணாமுட்டிஎந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று இல்லாமல் எடக்கு முடக்காகச் செய்யும் மனிதன். அதாவது, அறிவு கொஞ்சம் குறைவானவன்
நாள் முட்டும்நாள் முழுவதும்
நீலகிரி மரம்யுக்கலிப்டஸ் மரம்
நெட்டாரல்மழைத்தூரல் தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருத்தல்
நெண்டி விடுதல்ஒருவருக்கு எதிராக வேறொருவரைத் தூண்டி விடுதல், பழைய பிரச்சனையைக் கிளரி மனவேதனைப் படுத்துதல்
நெவ்வாக அரைத்தல்மாவை மிகவும் நுண்ணிய துகள்களாக அரைத்தல்
நோக்காடுநோய் நொடியுடன் கூடிய நிலை
புழுக்கமாக இருத்தல்வெக்கையாகவோ அல்லது உருக்கமாகவோ இருத்தல்
பொய்யாலாட்டம்கள்ளாட்டம்(போங்கு)
பொழிதிரிக்கும்நாள் முழுவதும்
பொழுதன்னைக்கும்நாள் முழுவதும்
முள்வேலி மரம்சீமைக் கருவேலமரம்
மைய அரைத்தல்நன்கு அரைத்தல்(நெவ்வைவிட கொஞ்சம் குறைவு)
விடியாப்பழங்கலம்எவ்வளவு உதவி செய்தாலும் முன்னேறாதவன்(ஆரம்பநிலையிலேதான் இருப்பான்)
விடியாப்பானைவிடியாப்பழங்கலம்
வீக்காடுநோய் முற்றிய நிலையில் படுத்த படுக்கையாதல்
வெகாளம்எதைச் சாப்பிடலாமோ என்று ஏங்குதல், அகோர ஆசை
வெட்டெலும்பன்சதைப்பற்று இல்லாத மெல்லிய தோலை உடைய எலும்பன்
வெளிக்கிகாலைக்கடன் (மலம்)
வேலிக்காத்தான்சீமைக் கருவேலமரம்
Submit a நடுநாட்டுச் சொல்
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.