பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து
பாவமூட்டை சுமந்து பரகதி சேர
பதற்றமாய் வாழும் பாவி மானிடா!
பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை?
மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா.
பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன்
Ta-ta போகிறேன் என்கிறாயா?
நீ பிறந்தது வீணிலும் வீணடா.
யார் வாழ்ந்தால் எனக்கென்ன?
நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா?
முன்னவனைவிட நீ மிக மோசமடா.
நீ பதுமை பூமிக்கு தண்டமடா.
பிறர் வாழ்வதைப் பார்த்துக் குமுறுகிறாயா?
உன் எரிமலைக் கண்களால் சுடுகிறாயா?
நீயொரு கொலை பாதகனடா.
பிறரை சுரண்டி நிதம் வாழ்கிறாயா?
அடே! நீ பூமிக்கு பாரமடா.
பிறர் சிறக்க தான் மகிழ்ந்து
காக்கைப்போல் பலர்க்கும் பகிர்ந்து
நிறைவானவனை நிதம் நினைத்து
வாழ்வின் பொருளுணர்ந்து வாழ்ந்து
நிம்மதி மூச்சு என்ற சைவ சிரிப்பை
நாம் உதிர்த்து வாழும் நன்னாட்களே
நண்பா! நாம் கொண்டாடும் திருநாளடா!
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
வணக்கம்
கவிதையின் வரிகள் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான வரிகள்… கவிதையை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… நன்றி… போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
மிக்க நன்றி ஐயா.
சைவ சிரிப்பா? புதிய சொல் பிரயோகம்! கொஞ்சம் விளக்க முடியுமா?
நீ பதுமை பூமிக்கு தண்டமடா – நீ ஒரு பதுமை என்று அர்த்தம் கொள்வதா? அல்லது பூமி ஒரு பதுமை என்று பொருள் கொள்வதா?
சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் இந்தக் கேள்விகள். மன்னிக்கவும்.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!
வணக்கம் அம்மா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களது கேள்விகளுக்கான விளக்கங்கள்.
1.ஒரு மனிதன் நீடு வாழ சைவ உணவை சாப்பிடுவதே சிறந்தது.
அதுபோல, கள்ளம், கபடம், சூது, வாது மற்றும் கெட்ட எண்ணங்கள் போன்ற அசைவங்களைத் தவிர்த்து வாழ்ந்தால் மக்கள் மனதில் நீடு வாழலாம்.
எனவே, ஒருவன் விடும் நிம்மதி பெருமூச்சு என்பது யாரையும் பாதிக்காத, அசைவ கலப்படம் இல்லாத, தன் கடின உழைப்பினால் மட்டுமே கிடைத்ததாக இருக்கவேண்டும். அவ்வாறு ஒருவன் நிம்மதி பெருமூச்சு விடும் நேரம்தான் அவன் உண்மையாக சிரிக்கும் நேரமாக இருக்க முடியும். அதனால், நிம்மதி பெருமூச்சை சைவ சிரிப்பு என்று கூறுகிறேன்.
2. இங்கு பூமியை அழகான பதுமைக்கு ஒப்பிடுகிறேன்.
வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.
கால தாமதத்திற்கு மன்னிக்கவும். அலுவலகத்திலிருந்து தற்போதுதான் வந்தேன்.
வாழ்வின் பொருளுணர்ந்து வாழ வேண்டும் என்பதை சொன்ன வரிகள் சிறப்பு. ரஞ்சனி அம்மாவின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நானும் படித்து தெரிந்து கொள்வேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ரஞ்சனி அம்மாவின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளேன்.
நன்றி.
அலுவலகத்திலிருந்து வந்தவுடன், விளக்கம் எழுதியதற்கு பாராட்டுக்கள். அறிவுபூர்வமான விளக்கங்களுக்கு நன்றி, ரீகன் ஜோன்ஸ்.
போட்டியில் வெற்றி பெற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.
வணக்கம்
உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அத்தனையும் நிஜம் நன்றாக இருந்தது. நன்றாக ரசித்தேன்.
தொடரவாழ்த்துக்கள் ….! போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கு நன்றி.