தமிழா! தமிழா! தமிழா!
நீ பேசுவது செம்மொழியா?
இயற்றமிழ் பேசும் முத்தமிழா!
சாதனை புரியும் கலைத்தமிழா!
இசைத்தமிழ் உன் குரலா?
நாடகத்தமிழ் உன் நடையா?
பைந்தமிழ் உன் உருவமா?
தமிழ் பேசும் தனித்தமிழா!
வள்ளுவனின் குறள் இனிது.
பாரதியின் பாட்டினிது.
உனக்குள் எது இனிது?
புறந்தூய்மையா? அகந்தூய்மையா?
அரிதான மனித பிறவி
நீ எடுத்தாய் – ஆனால்,
அன்பான அறசெயல்
உன்னிடம் உண்டா?
பெயரளவில் தமிழனா?
பேச்சளவில் தமிழனா?
உருவத்தில் மனிதனா?
குணத்தளவில் குரங்கா?
நீ வாழப் பிறரைக் கெடுக்கின்றாயா?
பிறர் வாழக் கைக் கொடுக்கின்றாயா?
கடவுளை எங்கேடா தேடுகிறாய்?
அவன் உனக்குள் இருக்கும் நல்ல சக்தியடா!
விண்ணைக் குலுக்கும் மனிதா நீ!
இது கவிஞர் தாரா பாரதி சொன்னதடா.
நெஞ்சை உலுக்கிடும் அவர் வரிகலடா.
துணிந்து மனம் கோர்த்து நிதம் நில்லடா.
ஒன்றென்று கொட்டு முரசே!
அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!
பாரதி கொட்டின முரசல்லவா!
ஞாபகம் வருகின்றதா? தாய்த்தமிழா!
நான் தமிழனென்று சொல்லடா!
பாரதிகள் கண்ட வையகம் தனை,
தமிழர்கள் படைப்போம் என்று
மார் தட்டி நில்லடா தமிழா!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
சாட்டையடி வரிகள் நன்று…
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…