ஒத்தப் பழமொழி:
கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கிளாக்காய் மேல்.
இரண்டு பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன.
கதை:
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது. நாள்
முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. அதனால் அதற்குப் பசியால் உயிரே போகிவிடும்
போலிருந்தது.
கடைசியில் மாலையில் ஒரு முயலைக் கண்டுவிட்டது. அது தூங்கிக் கொண்டிருந்தது. சிங்கம் தன்
மனதிற்குள் நினைத்தது, “நாம் இப்போதைக்கு ஏதாவது சாப்பிடவில்லையென்றால் இறந்தே விடுவோம். இந்த முயலைச் சாப்பிட்டால் இன்று ஒருநாள் சமாளித்துக் கொள்ளலாம். பிறகு நாளைப் பார்த்துக்
கொள்ளலாம்.” என்று எண்ணிக்கொண்டே நிதானமாக முயலை நோக்கிச் சென்று
கொண்டிருந்தது.
ஆனால், என்ன ஆச்சர்யம்! கொஞ்சம் தூரத்தில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. “ஆ!
நாம் இந்த மானைக் கொன்றால் வயிறு புடைக்கச் சாப்பிடலாம்” என்று எண்ணிய சிங்கம்
அதனைத் துரத்தியது.
இந்தச் சத்தத்தைச் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த முயல் எழுந்து ஓடிவிட்டது. மானைத் துரத்திச் சென்ற சிங்கத்திற்குத் தோல்விதான் மிஞ்சியது. இறுதியில் இரண்டையும் விட்டுவிட்டு பசி தாங்க முடியாமல் செத்தே போனது அந்தச் சிங்கம்.
இதே போன்று யாராவது கிடைத்த பொருளை விட்டுவிட்டு கிடைக்காத பொருளுக்காக ஆசைபடும்போது
“இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே” என்போம்.
கிடைக்கப் போகும் பலாக் காயைவிட கையில் இருக்கும் கிளாக்காய் மேல்:
எடுத்துக்காட்டாக, நாம் ஒரு வேலையில் இருக்கிறோம் என்றால், அந்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதைவிட நல்ல வேலை கிடைக்கப்போவதாக இருந்தாலும் கூட அது உறுதியாகும் வரை, இருக்கும் வேலையை விட்டுவிடக் கூடாது.
நமக்குக் கொடுக்கப்பட்டதை வைத்துக்கொண்டு தன்னிறைவு அடைய முயற்சிப்போம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.