Category: கவிதைகள்

வாழ்க! நல்லவனாய்! – கவிதை

மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது. ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது குணம் கொண்டவனாய் மனங்கள் போற்ற வாழ்வது கடிது. பிறர் வாழத் தானும் வாழ்ந்து அறம் செழிக்க வாழ்வு வாழ்ந்திடல் சொல்லுதல் …

இறைவனின் இன்பப் படைப்பினிலே – கவிதை

இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்தனை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது! …

புதிய மனிதன் – கவிதை

அற்ப சுவாச மனிதா நீ பிறர் மனங்கள் என்றும் பதறாமல் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாய் வாழ்ந்திட என்றும் வரம் கேளு. ஒவ்வொரு மனிதனும் உறவு என்று உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு. ஒவ்வொரு குறைவையும் உடனகற்று. உன் உள்ளத்தின் இருட்டை …

நாம் சிரிக்கும் நாளே திருநாள் – கவிதை

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமந்து பரகதி சேர பதற்றமாய் வாழும் பாவி மானிடா! பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை? மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா. பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன் Ta-ta போகிறேன் என்கிறாயா? நீ பிறந்தது …

சுதந்திரம் – சுதந்திரத் திருநாள் சிறப்புக் கவிதை

மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? நினைக்கச் சொல்லுதே! நினைக்க வைக்குதே! புகழச் சொல்லுதே! போற்றச் சொல்லுதே! தியாக தீபங்களின் தியாக வாழ்வை! எத்தனை போராட்டங்கள்! எத்தனை மறியல்கள்! எத்தனை குழப்பங்கள்! எத்தனை முழக்கங்கள்! எத்தனை இயக்கங்கள்! எத்தனை இறப்புகள்! எத்தனை …

காமராஜர்

நல்லவரைத் தன்னருகில் வைத்துக் கொண்டவர் நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர் கல்வி என்ற கனவை நனவாக்கியவர் அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர் தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’ தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர் வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர் …

அணில் பாட்டு – கவிதை

அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில்பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகுவிரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே! …

உண்மை + உழைப்பு = மனிதன்

வாழப் பிறந்தவன் மனிதன், சோம்பித் திரிபவன் மனிதனல்ல. படைக்கத் தெரிந்தவன் மனிதன், அழிக்கத் தெரிந்தவன் மனிதனல்ல. அன்பாய் இருப்பவன் மனிதன், அரக்கன் என்றும் மனிதனல்ல. வாழ வைப்பவன் மனிதன், வஞ்சிப்பவன் மனிதனல்ல. சிரித்து வாழ்பவன் மனிதன், சிரிக்க வாழ்பவன் மனிதனல்ல. …

எங்கள் வீட்டுப் பட்டு

பட்டுப் பட்டாம்பூச்சி பறந்து பறந்து போச்சி. பூவுக்குப் பூவு தாவி தேனை குடிக்கலாச்சி. கண்கள் ரசிக்கலாச்சி என் மனமும் மயங்கலாச்சி. கால்கள் தேடித் தேடி அதனைப் பிடிக்கப் போச்சி. நான் ஓடி ஓடிப் போக ஆடுது கண்ணா மூச்சி. நானும் …

தமிழன் என்று சொல்லடா!

தமிழா! தமிழா! தமிழா! நீ பேசுவது செம்மொழியா? இயற்றமிழ் பேசும் முத்தமிழா! சாதனை புரியும் கலைத்தமிழா! இசைத்தமிழ் உன் குரலா? நாடகத்தமிழ் உன் நடையா? பைந்தமிழ் உன் உருவமா? தமிழ் பேசும் தனித்தமிழா! வள்ளுவனின் குறள் இனிது. பாரதியின் பாட்டினிது. …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.